உலகம்
பீஜிங் வாங்க.. வங்காளதேசம் பிரதமருக்கு அழைப்பு விடுத்த சீனா
- ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு.
- வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.
சீனாவுக்கு அலுவல் பூர்வ பயணம் மேற்கொள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. வங்காளதேசத்தில் புதிய அரசு அமைந்துள்ளதை அடுத்து, அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
"நாங்கள் பயணத்திற்கு ஏற்ற வகையில், சரியான நேரத்தை தேர்வு செய்கிறோம்," என்று வங்காளதேச வெளியுறவு துறை மந்திரி ஹசன் மஹ்மூத் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.
பிரதமரின் பீஜிங் சுற்றுப் பயணத்திற்கு ஏற்ற நேரம் ஒதுக்கி, பயணத்திற்கு வேண்டிய முன்னேற்பாடுகளை செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா முன்னதாக 2019-ம் ஆண்டு அலுவல்பூர்வ பயணமாக சீனா சென்றிருந்தார்.