உலகம் (World)

பலூனை சுட்டு வீழ்த்திய விவகாரம்- அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

Published On 2023-02-05 14:42 GMT   |   Update On 2023-02-05 14:42 GMT
  • உளவு பலூனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது
  • இது சர்வதேச நடைமுறையை மீறிய செயல் என சீனா கூறி உள்ளது

பீஜிங்:

அமெரிக்காவின் மொன்டானாவில் இருந்து தென் கரோலினா வரை வானத்தில் வட்டமிட்ட சீன பலூன் அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்தபோது, அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது, உளவு பலூனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது சட்டபூர்வமான நடவடிக்கை என்றும், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

ஆனால் இதற்கு சீனா கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இது சர்வதேச நடைமுறையை மீறிய செயல் எனவும், இதற்கு தேவையான பதில் நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.

Tags:    

Similar News