இஸ்ரேல், ஹமாஸ் படை மோதலால் மேற்கு ஆசிய நாடுகளிடையே பிளவு ஏற்படும் அபாயம்
- லெபனான் மற்றும் சிரியாவை சேர்ந்த போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
- இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடர் தாக்குதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மறுபுறம், லெபனான் மற்றும் சிரியாவில் இருந்து ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. இந்த மோதல் மேலும் பரவும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
லெபனான் மற்றும் சிரியாவை சேர்ந்த போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
லெபனான் போராளிக் குழுவான ஹெஸ் பொல்லா இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் மீது எதிர்ப்பு ஏவுகணைகளை வீசியது.
இந்தத் தாக்குதல்களில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஹெஸ் பொல்லா அறிவித்தார். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடர் தாக்குதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நாடுகளுக்கிடையே பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மோதலில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்ற நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளார்.