டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெறுகிறார் பிரதமர் மோடி
- 70,000 ஆஸ்டிராஜெனிகா டோஸ்களை டொமினிகாவுக்கு இந்தியா வழங்கியது.
- அவற்றை பெற்று சக கரீபியன் நாடுகளுக்கு டொமினிகா ஆதரவுக் கரம் நீட்டியது.
ரோசி:
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின்போது அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்களை வழங்கி உதவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர்.
கொரோனா தடுப்புக்கான 70 ஆயிரம் ஆஸ்டிராஜெனிகா டோஸ்களை டொமினிகாவுக்கு இந்தியா வழங்கியது. இதனால் அவற்றை பெற்று சக கரீபியன் நாடுகளுக்கு டொமினிகா ஆதரவுக் கரம் நீட்டியது.
கொரோனாவை கட்டுப்படுத்த, பரவலைத் தடுக்கும் வகையிலான மருந்து பொருட்களை டன் கணக்கில் அந்நாடுகளுக்கு அனுப்பி இந்தியா உதவிக்கரம் நீட்டியது.
இதற்காகவும், டொமினிகா மற்றும் இந்தியா இடையிலான நட்புறவை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்க டொமினிகா அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கயானா நாட்டின் ஜார்ஜ் டவுன் நகரில் வரும் 19 முதல் 21 வரையிலான 3 நாட்களில் இந்தியா-கேரிகோம் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடிக்கு டொமினிகா காமன்வெல்த் நாட்டின் ஜனாதிபதி சில்வானி புர்தன் விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறார்.
டொமினிகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு ஆதரவளித்த பிரதமர் மோடிக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் இந்த விருது அமையும் என அந்நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் தெரிவித்துள்ளார்.