தொடரும் பதிலடி... ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீசி ரஷிய வீரரை தாக்கிய உக்ரைன்
- ரஷிய வீரர்களுக்கு உக்ரைன் ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
- இரண்டு வீரர்களில் ஒருவர் ஆபத்தை உணர்ந்து சற்று தள்ளி ஓடுகிறார்.
கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் 6 மாதங்களாக நீடித்து வருகிறது. போர் தொடங்கிய பிப்ரவரி 24ம் தேதியில் இருந்து இதுவரை இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்குள் ரஷிய படையினா ஊடுருவி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
அவ்வகையில் தற்போது உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான ட்ரோன் ஒன்று ரஷிய ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு வீசுவதைக் காட்டும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை ரெடிட் என்ற சமூக வலைத்தளத்தில் நிவிவி என்பவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இரண்டு ரஷிய வீரர்கள் வயலில் நடந்து செல்லும்போது, அவர்கள் மீது திடீரென வெடிகுண்டு வீசப்படுகிறது. அப்போது இரண்டு வீரர்களில் ஒருவர் ஆபத்தை உணர்ந்து சற்று தள்ளி ஓடுகிறார். மற்றொருவரின் அருகில் வெடிகுண்டு விழுந்து வெடித்ததால் அவர் காயமடைந்தார்.
இந்த வீடியோவைப் பார்த்த நூற்றுக்கணக்கானோர் ஆதரவை தெரிவித்துள்ளனர். சிலர் தங்கள் கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர். சில பயனர்கள் போர் பகுதிகளில் உயிர்களைக் காப்பாற்றுவது பற்றி முக்கியமான குறிப்புகளை வழங்கினர்.