உலகம்
null

25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 5.5 லட்சம்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழருக்கு அடித்த ஜாக்பாட்

Published On 2023-10-20 14:49 GMT   |   Update On 2023-10-20 14:52 GMT
  • ஐக்கிய அரபு அமரீகத்தை சாராத முதல் வெற்றியாளர் நடராஜன்.
  • கல்வி கற்கும் போது எனக்கு பலர் உதவி செய்திருக்கின்றனர்.

ஆம்பூரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் மகேஷ் குமார் நடராஜன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜாக்பாட் வென்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5.5 லட்சம் தொகை வழங்கப்பட இருக்கிறது.

49 வயதான நடராஜன் எமிரேட்ஸ் டிராவின் ஃபாஸ்ட் 5 பம்ப்பர் பரிசை வென்று இருக்கிறார். இதில் அவருக்கு ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் DH (மாதம் ரூ. 5.6 லட்சம்) தொகை 25 ஆண்டுகளுக்கு பரிசு தொகையாக வழங்கப்பட இருக்கிறது. ஐக்கிய அரபு அமரீகத்தை சாராத முதல் வெற்றியாளர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

Full View

"வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்தித்து இருக்கிறேன். நான் கல்வி கற்கும் போது எனக்கு பலர் உதவி செய்திருக்கின்றனர். தற்போது சமூகத்திற்கு எனது பங்களிப்பை வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. சமூகத்தில் தேவையானோருக்கு என் சார்பில் நிச்சயம் உதவிகளை செய்வேன்," என்று பம்ப்பர் பரிசை வென்ற நடராஜன் தெரிவித்து உள்ளார்.

"இது மிகவும் நம்ப முடியாத தருணம். இது என் வாழ்நாளில் மிகவும் மறக்க முடியாத நாளாக மாறி இருக்கிறது. பரிசு தொகையை எனது மகள்களின் கல்வியில் முதலீடு செய்யவும், குடும்பத்தாரின் எதிர்காலத்தை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Tags:    

Similar News