உலகம்

காசா ஆஸ்பத்திரி தாக்குதலில் 500 பேர் பலி: ஐ.நா. கடும் கண்டனம்

Published On 2023-10-18 06:55 GMT   |   Update On 2023-10-18 06:55 GMT
  • காசா நகரில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டது அறிந்து பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன்.
  • என் இதயம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் உள்ளது.

நியூயார்க்:

காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக இஸ்ரேலும், ஹமாசும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர்.

காசா மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் என்றும் தாக்குதல் நடத்தி விட்டு ஹமாஸ் மீது இஸ்ரேல் அதிபர் பழி சுமத்துவதாகவும் ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தெரிவித்தார்.

இந்த நிலையில் காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தனது எக்ஸ் பதிவில் கூறி இருப்பதாவது:-

காசா நகரில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டது அறிந்து பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என் இதயம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் உள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியிடங்கள் பாதுகாக்கப்படுபவைகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News