H3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஜப்பான்
- H3 வகையைச் சேர்ந்த ராக்கெட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.
- ஆனால் விண்ணில் பாய்ந்த 14 நிமிடத்தில் வெடித்து சிதறியது.
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம்) இன்று புதிய H3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை (Daichi-4 (ALOS-4)) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
இந்த ராக்கெட் நேற்று விண்ணில் பாய இருந்தது. ஆனால் சீதோஷ்ண நிலை காரணமாக (மோசமான வானிலை) தள்ளிவைப்பட்டது. இந்த நிலையில் டனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சுமார் 15 நிமிடம் 34 வினாடிகளில் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து சென்றதாகவும், அதன்பின் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.
H3 வகையைச் சேர்ந்த ராக்கெட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் விண்ணில் பாய்ந்த 14 நிமிடத்தில் வெடித்து சிதறியது. 2-ம் வகை என்ஜின் செயல்படாமல் தோல்வியடைந்ததால் வெடித்து சிதறும் நிலை ஏற்பட்டது. அதன்பின் 2-வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செலுத்தியது.
H3 இரண்டு நிலை திரவ எரிபொருள் ராக்கெட் ஆகும். H2A வகை ராக்கெட் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக H3 வகை ராக்கெட் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
H2A ராக்கெட்டை விட 1.3 மடங்கு அதிகமான சரக்குகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது H3 ராக்கெட். H2A ராக்கெட்டை விட பாதி அளவே செலவினம் கொண்டது H3 ராக்கெட் ஆகும்.
1.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 9 வருடங்களுக்கு முன்னதாக இந்த ராக்கெட் உருவாக்கும் பணி தொடங்கியது.