உலகம்

வைத்த கண் வாங்காமல் பார்த்த மோடி - மெலோனி.. குரூப் போட்டோவில் மிஸ் ஆன ஜோ பைடன் - ஜி20 வைரல் பிக்ஸ்

Published On 2024-11-19 10:12 GMT   |   Update On 2024-11-19 10:12 GMT
  • இந்தியா சார்பில் சென்ற பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார்
  • பேச்சுவார்த்தை நடக்கும் மேஜையில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்

பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் வைத்து 19-வது ஜி 20 உச்சி மாநாடானது நேற்றும் இன்றும் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் கலந்துகொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளனர்.

அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் ஜி 20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது. தற்போது நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், இத்தாலி, பிரான்ஸ் அதிபர்கள் என உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் சென்ற பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார். இந்நிலையில் ஜி20 மாநாட்டின் ஹைலைட்டாக இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒன்றில் அனைத்து தலைவர்களும் சேர்ந்த எடுத்த குரூப் போட்டோவில் அமெரிக்க அதிபரை காணவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

 

 

ஜோ பைடன் வருதற்கு தாமதமானதால் அவர் புகைப்படத்தில் இருந்து விடுபட்டுள்ளார் என்று மாநாட்டை ஏற்பாடு செய்த பிரேசில் அதிகாரிகள் விளக்கமளித்தாலும், ஜோ பைடன் பதவிக்காலம் வரும் ஜனவரியில் முடிவடைய உள்ளது என்பதால் அதன் பின்னர் அவரது முக்கியத்துவம் உலக அரங்கில் இருக்காது என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த படம் இருப்பதால் இதை இணையவாசிகள் டிரண்ட் செய்து வருகின்றனர்.

மற்றொரு புகைப்படம் இந்திய பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ லியோனி ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடக்கும் மேஜையில் எதிரெதிரே அமர்ந்து நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் கண்கொட்டாமல் பார்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

 

மெலோனி மற்றும் மோடி நட்புறவு, கடந்த ஜூன் மாதத்தில் இத்தாலியில் வைத்து நடந்த ஜி7 மாநாட்டில் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு மெலோனி + மோடி = மெலோடி என்று பொருள்படும்படி அதிபர் மெலோனி சமூக வலைதளத்தில் பதிவிட்டது வைரலானது. எனவே தற்போது ஜி20 மாநாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மெலோனியை சந்தித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, ""ரியோ டி ஜெனிரோ ஜி 20 மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவதை மையமாக வைத்து எங்களது பேச்சுக்கள் அமைந்தன.

கலாச்சாரம், கல்வி மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் நாங்கள் பேசினோம். இந்தியா-இத்தாலி நட்புறவு ஒரு சிறந்த உலக முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்" என்று அதில் பதிவிட்டிருந்தார். 

Tags:    

Similar News