உலகம்

ஒரே ஆண்டில் 101 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியா - பகீர் பின்னணி

Published On 2024-11-19 12:29 GMT   |   Update On 2024-11-19 12:29 GMT
  • கடந்த 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளை விட இது மூன்று மடங்கு அதிகமாகும்
  • சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா 3 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது..

வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரங்களுக்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மத்திய கிழக்கில் செல்வச்செழிப்பான நாடக விளங்கும் சவூதி அரேபியாவில் பலர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்குச் சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏமன் நாட்டவர் ஒருவருக்கு சனிக்கிழமையன்று சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த வருட மரண தண்டனை எண்ணிக்கை குறித்த தரவுகள் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த ஆண்டில் [2024 இல்] இதுவரை மொத்தமாக 274 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதில் 101 வெளிநாட்டவர்கள் ஆவர். இது கடந்த 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளை விட இது மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

 

பாகிஸ்தானைச் சேர்ந்த 21 பேர், ஏமன் - 20 பேர், சிரியா - 14 பேர், நைஜீரியா - 10, எகிப்து - 9 பேர், ஜோர்டான் - 8 பேர், எத்தியோப்பியா - 7 பேர், சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா 3 பேர், இலங்கை, எரித்திரியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தலா ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடந்தால் தொடர்பாக வழக்குகள் இந்த ஆண்டு மரண தண்டனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.  இந்த ஆண்டு போதைப்பொருள் வழக்குகளில் 92 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அதில் 69 பேர் வெளிநாட்டவர்கள். ஒரு வருடத்தில் இந்த அளவிலான எண்ணிக்கையில் வெளிநாட்டவர்களுக்கு சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றுவது இதுவே முதல் முறை.

 

சவுதி இளவரசர் - முகமது பின் சல்மான் அல் சவுத் 

முன்னதாக 2023ல் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனையை நிறைவேற்றிய நாடாக சவுதி அரேபியா இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த மரண தண்டனைகள் சர்வதேச அரங்கில் கவலையளிப்பதாக உள்ளது.

Tags:    

Similar News