உலகம்
ஈரான் தலைமையிலான பயங்கரவாதத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஹமாஸ்: இஸ்ரேல் பிரதமர்
- காசாவில் இஸ்ரேல் ராணுவம் மும்முனைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
- இருதரப்பிலும் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் நீடித்து வருகிறது.
காசாமீது இஸ்ரேல், வான், கடல், தரைவழி என மும்முனை தாக்குதல் நடத்திவருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், ஈரான் தலைமையிலான பயங்கரவாதத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஹமாஸ் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் நாடுகளின் எதிர்காலம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், நீங்கள் ஹமாசுக்கு எதிராக நிற்க வேண்டும். எங்கள் போர் உங்கள் போர். இந்தப் போரில் எங்களுக்காகவும் உங்களுக்காகவும் நாங்கள் வெல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.