உலகம் (World)
null

பிரமிடின் உச்சியில் உலவிய நாய்

Published On 2024-10-17 03:36 GMT   |   Update On 2024-10-17 03:38 GMT
  • பலூனில் பாராகிளைடிங் செய்த அலெக்ஸ் லாங்கால் என்பவர், திடீரென இந்த காட்சியை கண்டார்.
  • செல்பி எடுத்தபடி பயணித்தபோது, இந்த காட்சியையும் வீடியோவாக பதிவு செய்து எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டார்.

பிரமிடுகளில் ஏற மனிதர்களுக்கு அனுமதியில்லை. மனிதனால் சுற்றிப் பார்க்க முடியாத பிரமிடின் உச்சியில் ஏறி நாய் சுற்றி வரும் வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.

பிரமிப்பு தரக்கூடியது பிரமீடுகள். கிஸா பிரமிடு 450 அடி உயரம் கொண்டது. சிறிய குன்று போல இருக்கும். எகிப்தில் உள்ள 118 பிரமிடுகளில் இதுதான் பெரியது. பழமையான பாரம்பரிய சின்னமான பிரமிடுகளில் ஏறுவது தடை செய்யப்பட்டு உள்ளது. அதனால் மனிதர்கள் பிரமிடின் உச்சியை பார்ப்பது அரிது. ஆனால் அதன் உச்சியில் ஒரு நாய் ஏறிச் சென்று சுற்றிக் கொண்டிருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

பலூனில் பாராகிளைடிங் செய்த அலெக்ஸ் லாங்கால் என்பவர், திடீரென இந்த காட்சியை கண்டார். அவர் செல்பி எடுத்தபடி பயணித்தபோது, இந்த காட்சியையும் வீடியோவாக பதிவு செய்து எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டார். நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட வீடியோ பிற்பகலுக்குள் சுமார் 5 லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது. பறவைகளை துரத்திக்கொண்டு சென்ற நாய், பிரமிடின் உச்சியை அடைந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

Similar News