உலகம்

பூடானில் தாய்-சேய் நல மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Published On 2024-03-23 04:04 GMT   |   Update On 2024-03-23 04:04 GMT
  • பூடான் நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
  • இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக பூடான் வந்துள்ளார். அவருக்கு பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோர் பூடான் நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருதை அளித்தனர். விருதைப் பெற்றுக்கொண்டதும் பிரதமர் மோடி இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த விருது தரவரிசை மற்றும் முன்னுரிமையின்படி, ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ வாழ்நாள் சாதனைக்கான அலங்காரமாக நிறுவப்பட்டது. பூடானில் உள்ள மரியாதை அமைப்பின் உச்சமாக உள்ளது. இது அனைத்து உத்தரவுகள், அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை விட முதன்மையானது. மேலும், இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், பூடான் நாட்டில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட நவீன மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தலைநகர் திம்புவில் இந்தியாவின் நிதியுதவியுடன் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள தாய்-சேய் நல மருத்துவமனையை திறந்து வைத்து பிரதமர் மோடி பார்வையிட்டார்.

Tags:    

Similar News