பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி
- பிரதமர் மோடிக்கு பப்புவா நியூகினியாவில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் (டோக் பிசின்) திருக்குறளை அவர் வெளியிட்டார்.
பப்புவா நியூ கினியா:
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் (டோக் பிசின்) திருக்குறளை வெளியிட்டார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்ட செய்தியில், பப்புவா நியூ கினியாவில் டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராபேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு. குறளை டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண கவர்னர் மற்றும் சுபா சசீந்திரன் ஆகியோரைப் பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
டோன் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பிரதமர் மோடி