உலகம்
அர்ஜென்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு
- நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
பியூனஸ் அயர்ஸ்:
அர்ஜென்டினாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. இன்று காலை 8.35 மணிக்கு பூமிக்கு அடியில் 169 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் சிலி நாட்டிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.