உலகம்
null

கின்னசில் இடம் பிடித்த ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 'பர்கர்'- வீடியோ

Published On 2024-07-11 05:04 GMT   |   Update On 2024-07-11 05:42 GMT
  • இந்த பர்கருக்கு 'தி கோல்டன் பாய்' என்று பெயரிட்டுள்ளனர்.
  • பர்கர் விற்பனையில் இருந்து கிடைத்த வருமானம் வசதியற்ற குடும்பங்களுக்கு உதவியது என ராபர்ட் தெரிவித்தார்.

இன்றைய ஆடம்பர உலகில் ஒரு குறிப்பிட்ட பர்கர் அதன் நம்ப முடியாத உயர்ந்த விலை, சுவைகள் மற்றும் பொருட்களின் சிறப்பு கலவை காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரபல சமையல் நிபுணரும், டி டால்டன்ஸ் என்ற உணவகத்தின் உரிமையாளருமான ராபர்ட் ஜான் டி வென் என்பவர் இந்த பர்கரை உருவாக்கி உள்ளார். இதன் விலை 5 ஆயிரம் யுரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.4.5 லட்சம்) ஆகும்.

இந்த பர்கருக்கு 'தி கோல்டன் பாய்' என்று பெயரிட்டுள்ளனர். இந்த பர்கர் தங்க இலைகள், குங்குமப்பூ, வாக்யு மாட்டிறைச்சி மற்றும் பல சத்தான, விலை உயர்ந்த உணவு பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த உணவு பொருட்களின் பட்டியலில் தனது பர்கரும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக ராபர்ட் கூறினார்.

மேலும் இந்த பர்கரின் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பர்கர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. இதை ஒரு சாதனைக்காக மட்டும் உருவாக்கவில்லை. இந்த பர்கர் விற்பனையில் இருந்து கிடைத்த வருமானம் வசதியற்ற குடும்பங்களுக்கு உதவியது என ராபர்ட் தெரிவித்தார்.

Tags:    

Similar News