உலகம்

வரலாற்றில் முதல்முறையாக பாலைவனத்தில் பனிப்பொழிவு- வைரலாகும் வீடியோ

Published On 2024-11-08 08:02 GMT   |   Update On 2024-11-08 08:02 GMT
  • சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பகுதியில் அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
  • பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சவுதி அரேபியாவில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பகுதியில் அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளித்த பாலைவனத்தில் தற்போது பனிப்பொழிவும் நிகழ்ந்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி பிறநாட்டு மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி ஓமன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (என்சிஎம்) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News