உலகம்

அதிபர் சிரில் ரமபோசா

பண்ணை ஊழல் விவகாரம் - தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா பதவிக்கு நெருக்கடி

Published On 2022-12-01 22:45 GMT   |   Update On 2022-12-01 22:45 GMT
  • தென் ஆப்பிரிக்க அதிபர் மீது பார்ம்கேட் என்னும் பண்ணை ஊழல் விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
  • தனது பண்ணை வீட்டில் ரூ.32 கோடி திருட்டு போனதை அதிபர் மறைத்ததால் அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சியோல்:

தென் ஆப்பிரிக்காவில் அதிபர் பதவி வகிப்பவர் சிரில் ரமபோசா (70). இவர் மீது 'பார்ம்கேட்' என்னும் பண்ணை ஊழல் விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இவர் தனது பண்ணை வீட்டில் இருந்து 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.32 கோடி) திருட்டு போனதை, தனது பதவியைத் தவறாக பயன்படுத்தி மறைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த ஊழல் பற்றி ஒரு சுயாதீன குழு விசாரணை நடத்தி அதன் அறிக்கை வெளியே கசிந்து விட்டது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பாராளுமன்றம் ஆய்வுசெய்து அடுத்த வாரம் அதிபர் சிரில் ரமபோசா மீது 'இம்பீச்மெண்ட்' (பதவிநீக்க தீர்மானம்) கொண்டு வருவதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். எனவே அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்தப் பணம், அவர் ஊழல் செய்து சேர்த்த பணம் என்ற புகார் எழுந்துள்ளது. ஆனால் அதிபர் சிரில் ரமபோசா இதை மறுத்துள்ளார்.

Tags:    

Similar News