உலகம்

சூடான் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதல் - அப்பாவி மக்கள் 40 பேர் பலி

Published On 2023-09-10 17:59 GMT   |   Update On 2023-09-10 17:59 GMT
  • கார்டோமில் ராணுவத்தினர் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
  • இது திசைமாறி அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் விழுந்தது.

கார்டோம்:

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த உள்நாட்டு கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கில் படுகாயம் அடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில், சூடான் தலைநகர் கார்டோமில் ராணுவத்தினர் டிரோன்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இது திசைமாறி அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் விழுந்தது.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 40 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News