உலகம்
உலக சாதனை படைக்க நீருக்கடியில் 100 நாள் வசிக்க தொடங்கிய அமெரிக்க விஞ்ஞானி
- 73 நாட்கள் நீருக்கடியில் வசித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.
- தண்ணீரில் 30 அடி ஆழத்தில் 100 சதுர அடி வீடு அமைத்து அங்கு தங்கி உள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
உலக சாதனை படைக்க ஒவ்வொருவரும் பல்வேறு செயல்களில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் 73 நாட்கள் நீருக்கடியில் வசித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இதனை முறியடிக்க அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஜோடிடுரி என்பவர் முடிவு செய்தார். அவர் 100 நாட்கள் நீருக்கடியில் இருக்கபோவதாக கூறியுள்ளார்.
இதற்காக கடந்த மாதம் 1-ந்தேதி கீ லார்கோவில் உள்ள ஜூல்ஸ் அண்டர்சீயில் இந்த சாதனையை தொடங்கி உள்ளார். தண்ணீரில் 30 அடி ஆழத்தில் 100 சதுர அடி வீடு அமைத்து அங்கு தங்கி உள்ளார்.