உலகம்

ஆப்பிரிக்கா நாடான சாத்தில் அரசுக்கு எதிராக போராடிய 60 பேர் சுட்டுக்கொலை

Published On 2022-10-21 06:41 GMT   |   Update On 2022-10-21 06:41 GMT
  • மத்திய ஆப்பிரிக்கா நாடான சாத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  • என்டிஜாமேனாவில் போராட்டக்காரர்கள் தடையை மீறி பேரணியாக செல்ல முயன்றனர்.

சாத்:

மத்திய ஆப்பிரிக்கா நாடான சாத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முக்கிய நகரங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் என்டிஜாமேனாவில் போராட்டக்காரர்கள் தடையை மீறி பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்கள் மீது பாதுகாப்பு போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டுகாயம் அடைந்த 30 பேர் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதேபோல் அந்த நாட்டின் 2-வது பெரிய நகரமான மவுண்டோவில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 30 பேர் பலியானார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அந்த நாட்டில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Similar News