சுவிட்சர்லாந்தில் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்த திட்டம்- வெடிகுண்டுடன் வாலிபர் சிக்கியதால் பரப்பரப்பு
- பாராளுமன்ற கட்டிடம், அரண்மனையில் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு கட்டிடங்கள், அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- வெடிகுண்டுடன் சிக்கிய நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னேவில் உள்ள பாராளுமன்றத்தின் நுழைவு வாயில் அருகே ஒரு வாலிபர் சுற்றி கொண்டிருந்தார். இதையடுத்து அந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரை சோதனை செய்தபோது குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்தார். மேலும் அவரிடம் வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாராளுமன்ற கட்டிடம், அரண்மனையில் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு கட்டிடங்கள், அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டுடன் சிக்கிய நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் காரில் வந்தது உறுதிபடுத்தப்பட்டதையடுத்து அந்த வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் வெடிகுண்டு இல்லை.
பிடிபட்ட நபர் யார்? எந்தவித வெடிகுண்டு வைத்திருந்தார் போன்ற தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. பாராளுமன்றத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.