உலகம்

அமெரிக்க வெள்ளை மாளிகையை மீட்டெடுப்பேன்: குடியரசு கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கோபத்தை வெளிப்படுத்திய டிரம்ப்

Published On 2023-01-30 10:45 GMT   |   Update On 2023-01-30 10:45 GMT
  • அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
  • குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் கொலம்பியாவில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.

கொலம்பியா:

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து அமெரிக்க எதிர்கட்சியான குடியரசு கட்சி இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டது. கடந்த முறை குடியரசு கட்சி சார்பில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், இந்த முறையும் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரது பிரசாரம் சூடுபிடிக்கவில்லை என்றும், மிக மெதுவாகவே அவரது பிரசாரம் நடப்பதாகவும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் கொலம்பியாவில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, தான் மிகவும் கோபமாக இருப்பதாக கூறினார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை மீட்டெடுக்கும் முயற்சியில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அதற்கான பிரசாரத்தில் இறங்கி விட்டேன் எனவும் தெரிவித்தார். அவரது பேச்சு மூலம் வருகிற தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

Tags:    

Similar News