உலகம்

உலகின் பணக்கார குடும்ப பட்டியலில் முதலிடம் பிடித்தது யார் தெரியுமா?

Published On 2024-01-20 06:37 GMT   |   Update On 2024-01-20 06:37 GMT
  • உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் குடும்பம் முதலிடத்தில் உள்ளது.
  • இந்த குடும்பத்திடம் 700 சொகுசு கார்கள் 8 ஜெட் விமானங்கள் உள்ளது.

அபுதாபி:

உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் குடும்பம் முதலிடத்தில் உள்ளது.

அல் நஹ்யான் 2022-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராக பொறுப்பேற்றார். ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள கஸ்ர் அல்-வதன் மாளிகையில் நஹ்யான் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ரூ.4,078 கோடி மதிப்பில் இந்த மாளிகை அமைந்துள்ளது. இங்கு அல் நஹ்யானின் 18 சகோதரர்கள், 11 சகோதரிகள், 9 குழந்தைகள், 18 பேரக் குழந்தைகள் என 56 பேர் வசிக்கின்றனர். இந்த மாளிகையில் 3,50,000 படிகங்களால் ஆன சர விளக்கு, மதிப்புமிக்க வரலாற்று கலைப்பொருட்கள் உள்ளன.

இந்த குடும்பத்திடம் 700 சொகுசு கார்கள் மற்றும் 8 ஜெட் விமானங்கள் உள்ளது.

உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் நஹ்யான் குடும்பத்தின் வசம் மட்டும் 6 சதவீதம் உள்ளது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் இக்குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளனர். பாடகி ரிஹானாவின் அழகுசாதன நிறுவனமான பென்டி, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் என பிரபல நிறுவனங்களில் முதலீடு மேற்கொண்டுள்ளனர். அதிபரின் சகோதரரான தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான், குடும்பத்தின் தலைமை முதலீட்டு நிறுவனத்திற்கு தலைமை தாங்குகிறார். இதன் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 28 ஆயிரம் சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் விவசாயம், எரிசக்தி, பொழுதுபோக்கு மற்றும் கடல்சார் வணிகங்களை செய்துவருகிறது.

இங்கிலாந்தின் பிரபலமான கால்பந்தாட்ட குழுவான மான்செஸ்டர் சிட்டியை ரூ.2,122 கோடிக்கு அல் நஹ்யான் குடும்பம் 2008-ம் ஆண்டு வாங்கியது.

ஐக்கிய அரபு எமிரேட்சை தவிர துபாய், பாரிஸ் மற்றும் லண்டன் உள்பட உலகம் முழுவதும் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.

Tags:    

Similar News