உலகம்

30 ஆயிரம் பேர் வசிக்கும் பிரமாண்ட குடியிருப்பு

Published On 2023-10-18 05:32 GMT   |   Update On 2023-10-18 05:32 GMT
  • சீனாவின் ஹாங்சோ பகுதியில் உள்ள கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டி பகுதியில் தான் குடியிருப்பு எஸ் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
  • 10 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு கட்டப்பட்டபோது அங்கு 20 ஆயிரம் பேர் வசித்தனர்.

உலக மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் பிரமாண்டமான பல கட்டிடங்கள் உள்ளன. அந்த வகையில் 36 மாடிகளை கொண்ட ஒரு பிரமாண்ட குடியிருப்பு பற்றிய தகவல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

காரணம், இந்த பிரமாண்ட குடியிருப்பில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனராம். சீனாவின் ஹாங்சோ பகுதியில் உள்ள கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டி பகுதியில் தான் இந்த குடியிருப்பு எஸ் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடியிருப்பு கட்டப்பட்டபோது அங்கு 20 ஆயிரம் பேர் வசித்தனர். தற்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இவ்வளவு பேர் ஒரே குடியிருப்பில் வசித்தாலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த குடியிருப்புக்குள்ளேயே இருப்பதுதான் அனைவரையும் வியக்க வைக்கிறது.

இந்த குடியிருப்பின் பெரிய உணவு விடுதி, நீச்சல் குளம், சலூன், பல்பொருள் அங்காடி மற்றும் கம்ப்யூட்டர் சென்டர் என பல்வேறு வசதிகளும் உள்ளது.

Tags:    

Similar News