உலகம் (World)

ரஷியாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்கும் உக்ரைன் பெண்கள் படை

Published On 2024-08-31 06:55 GMT   |   Update On 2024-08-31 06:55 GMT
  • உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
  • ரஷியாவின் ரோன்களின் தாக்குதலை முறியடிக்க 70 உக்ரைன் பெண்கள் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளனர்.

ரஷியா - உக்ரைன் போர் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அண்மையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை ரஷியா நடத்தியது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது.

இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்தது. டிரோன் விழுந்து சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடம் தீப்பற்றி எரிந்தது.

உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. ராட்சத மிசைல்கள் மற்றும் டிரோன்களை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷியாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்க உக்ரைன் பெண்கள் போர்க்களத்திற்கு வந்துள்ளனர். இந்த பெண்கள் குழு ரஷியாவின் டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் உக்ரைன் ஆண்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் உக்ரைன் எல்லையை பாதுகாத்து வருகின்றனர். ஆண்களோடு கைகோர்த்து தற்போது பெண்களும் நாட்டை பாதுகாக்க முன்வந்துள்ளனர். ரஷியாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்க முதற்கட்டமாக 70 பெண்கள் பாதுகாப்புப் படையில் சேர்ந்துள்ளனர்.

Tags:    

Similar News