உலகம்
பாலம் மீது கப்பல் மோதி விபத்து: ஆற்றில் இருந்து 2 பேரின் உடல்கள் மீட்பு
- பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 8 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர்.
- நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கடியில் ஒரு லாரியில் சிக்கியிருந்த 2 பேர் உடல்களை மீட்டு கொண்டு வந்தனர்.
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் படப்ஸ்கோ ஆற்றில் உள்ள இரும்பு பாலம் மீது சரக்கு கப்பல் மோதியதில் அப்பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 8 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர். இதில் 2 பேர் மீட்கப்பட்டனர். மற்ற 6 பேர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆற்றில் இருந்து 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கடியில் ஒரு லாரியில் சிக்கியிருந்த 2 பேர் உடல்களை மீட்டு கொண்டு வந்தனர். அவர்கள் மெக்சிகோவைச் சேர்ந்த அலெஜான்ட்ரோ ஹெர்னாண்டஸ் புயென்டெஸ் (35) மற்றும் கவுதமாலாவைச் சேர்ந்த டோர்லியன் ரோனல் காஸ்டிலோ கப்ரேரா (26) என அடையாளம் காணப்பட்டுள்ளது.