ஈரான் அதிபர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய துணை ஜனாதிபதி
- ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
- அவரது உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. இந்தியாவில் நேற்று துக்கம் அனுசரிப்பு.
டெஹ்ரான்:
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் கடந்த 19-ம் தேதி மாயமானது. அதன்பின், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் இப்ராஹிம் ரைசி உடல் கண்டெடுக்கப்பட்டது.
இப்ராஹிம் ரைசி மறைவுக்கு இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்திய தேசியக் கொடி நேற்று அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
இதற்கிடையே, இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில் இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஈரான் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவரை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்நிலையில், டெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அஞ்சலி செலுத்தினார்.
#WATCH | Vice President Jagdeep Dhankhar pays tribute to the President of Iran Dr Seyyed Ebrahim Raisi in Tehran.
— ANI (@ANI) May 22, 2024
Source: Vice President Office pic.twitter.com/GES6B8i8Na