உலகம்

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகிறார் அதிபர் டூ லாம்

Published On 2024-08-03 11:00 GMT   |   Update On 2024-08-03 11:00 GMT
  • பொதுச் செயலாளராக இருந்த டூ லாம் கடந்த மாதம் காலமானார்.
  • பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் டூ லாம் 40 வருடத்திற்கு மேலாக பொது பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்தவர்.

வியட்நாம் நாட்டின் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், நாட்டின் சக்கி வாய்ந்த அரசியல் தலைவருமான நுயென் ஃபூ ட்ரோங் தனது 80 வயதில் கடந்த மாதம் 19-ந்தேதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் காலமானார். 2011-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2021-ம் 3-வது முறையாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வியட்நாம் அதிபராக இருக்கும் டூ லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக பொறுப்பு ஏற்க இருப்பதை உறுதிப்படுத்தியள்ளார். இந்த பதவி அந்நாட்டின் மிகவும் அதிகாரமிக்கதாக பார்க்கப்படுகிறது.

கட்சியின் தலைமையை உறுதி செய்ய வேண்டிய அவசரத் தேவை காரணமாக தான் அந்த பதவியை ஏற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிபர் பதவியில் நீடிப்பாரா? என்பது குறித்து தெளிவுப்படுத்தவில்லை.

டூ லாம் 40 வருடத்திற்கு மேலாக பொது பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்துள்ளார். பின்னர் 2016-ல் மந்திரியாக பொறுப்பேற்றார். இவரது தலைமையில் உயர் அதிகாரிகள் மே மாதம் வரை ஊழல் எதிர்ப்பு பிரசாரம் மேற்கொண்டனர்.

வியட்நாம் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, லாம் அதிபர் ஆனார். அதனைத் தொடர்ந்து ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தில் இருந்து விலகினார்.

Tags:    

Similar News