உலகம்

ராணுவத்தை பலவீனப்படுத்துவது அரசை பலவீனப்படுத்துவதாகும்: பாகிஸ்தான் ராணுவ தளபதி

Published On 2024-08-14 14:14 GMT   |   Update On 2024-08-14 14:16 GMT
  • பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தேசத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை ராணுவத்தின் மதிப்புமிக்க சொத்து.
  • வரலாற்று ரீதியாக, ஒரு தேசமாக நாம் ஒவ்வொரு கஷ்டத்துக்குப் பிறகும் வலுவாக வெளிப்பட்டிருக்கிறோம்.

பாகிஸ்தானின் சுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் சுதந்திர தின பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர், ராணுவத்தை பலவீனப்படுத்துவது அரசை பலவீனப்படுத்துவதாகும் எனக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் கூறுகையில் "எந்தவொரு சக்தியாலும் நாட்டை சீரழிக்க (குறைமதிப்பிற்கு உட்படுத்த) முடியாது. நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும், நாட்டை பலவீனப்படுத்துவதற்கு சமமாகும்.

டிஜிட்டல் பயங்கரவாதத்தை பயன்படுத்தி, அரசு நிறுவனங்களுக்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் இடையே பிளவை உருவாக்க நினைக்கும் வெளிநாட்டு சக்திகளின் முயற்சிகளுக்கு மத்தியில் தேசிய ஒற்றுமையை காப்பது முக்கியமானது.

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தேசத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை ராணுவத்தின் மதிப்புமிக்க சொத்து. எந்தவொரு எதிர்மறை சக்தியாலும் இந்த நம்பிக்கை மற்றும் அன்பின் உறவை பலவீனப்படுத்த முடியவில்லை அல்லது எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய முடியாது.

வரலாற்று ரீதியாக, ஒரு தேசமாக நாம் ஒவ்வொரு கஷ்டத்துக்குப் பிறகும் வலுவாக வெளிப்பட்டிருக்கிறோம். நாட்டிற்கும் ராணுவத்திற்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை முக்கிய பங்கு வகித்தது. பாகிஸ்தானின் எதிர்காலம் பிரகாசமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. நமது படைகள் அதை உறுதியுடன் தொடர்ந்து பாதுகாக்கும்" என்றார்.

Tags:    

Similar News