ஹிஜாப் கட்டுப்பாடு.. ஈரான் பல்கலைக்கழகத்தில் ஆடைகளை கழற்றி மாணவி போராட்டம்- வீடியோ
- 2022-ம் ஆண்டு மாதம் ஈரானில் ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
- ஈரானில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிரான கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி 22 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த போது அவர் திடீரென இறந்தார். இதையடுத்து அந்நாட்டில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிரான கடுமையான போராட்டம் நடைபெற்றது
இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் காணப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. பின்னர் அந்த மாணவியை பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
ஈரானின் கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகளை எதிர்க்கும் விதமாக தான் அப்பெண் தனது ஆடைகளை கலைந்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
உள்ளாடைகளுடன் காணப்பட்ட பெண் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் மனநல பிரச்சனை உள்ளதாகவும் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் அமீர் மஹ்ஜோப் தெரிவித்தார்.