செய்திகள்
அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவண்ணாமலை கோவிலில் உத்ராயண புண்ணியகால உற்சவ கொடியேற்றம்

Published On 2018-01-05 06:35 GMT   |   Update On 2018-01-05 06:35 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணியகால உற்சவம், கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

திருவண்ணாமலை அருணசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய உற்சவங்கள், கொடியேற்றத்துடன் தொடங்குவது மரபு. ஆண்டுக்கு நான்கு முறை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடைபெறும்.

கார்த்திகை தீபத் திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், மார்கழி மாதத்தில் உத்ராயண புண்ணியகாலம் மற்றும் தட்சிணாயன காலம் ஆகிய வற்றின் தொடக்கமாக, அருணாசலேஸ்வரர் சன்னதி முன் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும்.

இந்நிலையில், மார்கழி மாதத்தில் நடைபெறும் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று காலை நடந்தது.

உத்ராயண புண்ணியகாலத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கொடியேற்றம் நடந்த காட்சி.

சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, தங்க கொடிமரத்தில் கொடி யேற்றினர். அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணா முலையம்மன் சமேத அண்ணாமலையார், விநாயகர், பராசக்தி அம்மன் ஆகியோர் தங்க கொடிமரம் முன் எழுந்தருளி அருள் பாலித்தனர். தொடர்ந்து, மாடவீதியில் பவனி வந்தனர். ஏராளனமா பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

உத்ராயண புண்ணியகால உற்சவத்தை முன்னிட்டு, மார்கழி மாதம் இறுதி வரை தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் சாமி வீதியுலா நடைபெறும். வரும் 14-ந் தேதி பிரசித்தி பெற்ற திருவூடல் திருவிழாவும், 15-ந் தேதி மறுவூடல் விழாவும் நடைபெற உள்ளது. 

Tags:    

Similar News