கணினி

இருவித அளவுகளில் புது ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்?

Published On 2022-10-17 05:07 GMT   |   Update On 2022-10-17 05:07 GMT
  • ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • மேலும் புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் சத்தமின்றி வித்தியாச முறையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் புதிய 2022 ஐபேட் ப்ரோ டேப்லெட் சீரிசை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இரு வேரியண்ட்களில் கிடைக்கும் என்றும் J617 மற்றும் J620 குறியீட்டு பெயர்களில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் செய்தி குறிப்பு வாயிலாக எளிமையாக அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக செப்டம்பரில் நடைபெற்ற ஐபோன் 14, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஆப்பிள் வாட்ச் SE (2022) மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா சாதனங்களின் அறிமுக நிகழ்வு போன்ற நேரலை நடத்தப்படாது என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப் போகும் புதிய மிக்சட்-ரியலிட்டி ஹெட்செட் அறிமுக நிகழ்வுக்காக இந்த ஆண்டு அறிமுகம் செய்யும் மற்ற சாதனங்களுக்கு செய்தி குறிப்பு மட்டும் வெளியிட ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார்.

புதிய ஐபேட் ப்ரோ (2022) மாடலில் N5P மேம்பட்ட 5nm முறையில் ஒவ்வொரு பாகங்களிலும் 20 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் அடங்கிய ஆப்பிள் M2 பிராசஸர் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த பிராசஸரை TSMC உருவாக்கும் என்றும் இது முந்தைய M1 பிராசஸரை விட 25 சதவீதம் அதிக டிரான்சிஸ்டர்களை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக M2 செயல்திறன் முந்தைய பிராசஸரை விட அதிகமாக இருக்கும்.

2022 ஐபேட் ப்ரோ மாடல்கள் வரிசையில் புதிய எண்ட்ரி லெவல் டேப்லெட்-ஐ ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபேட் 10 மாடலின் வடிவமைப்பு ஐபேட் ப்ரோ-வை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இதில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த மாடலின் ரெண்டர் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில் இந்த டேப்லெட் அளவில் சிறிய பெசல், லோசெஞ் வடிவ கேமரா பம்ப்ப, எல்இடி பிளாஷ் உள்ளிட்டவைகளை கொண்டிருப்பதும் தெரியவந்தது.

Photo Courtesy: mysmartprice

Tags:    

Similar News