ஆப்பிள் விஷன் ப்ரோ வாங்குவோருக்கு இப்படி ஒரு டுவிஸ்ட்-ஆ ? லீக் ஆன தகவல்!
- ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் ஆக்மென்டெட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி ஆப்களின் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
- அடுத்த ஆண்டு ஆப்பிள் விஷன் ப்ரோ விற்பனை அமெரிக்காவில் துவங்க இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆப்பிள் சர்வதேச வருடாந்தர டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC) தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-ஐ ஆப்பிள் விஷன் ப்ரோ பெயரில் அறிமுகம் செய்தது. புதிய சாதனம் பற்றி அந்நிறுவனம் ஏாளமான தகவல்களை விளக்கியது. அடுத்த ஆண்டு விஷன் ப்ரோ மாடல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய சாதனம் உலகளவில் பேசு பொருளாகி இருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ அம்சங்களில் ஆப்பிள் அறிவித்தவை மற்றும் அறிவிக்காமல் வழங்கப்பட இருப்பவை என்று, புதிய மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் பற்றி தினந்தோரும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சாதனத்தில் 3D நிட் செய்யபப்ட்ட ஃபேப்ரிக் கொண்ட ஹெட்பேன்ட் வழங்கப்படுகிறது.
இத்துடன் ஆப்பிள் அதிகம் பேசாமல் விட்ட மற்றொரு ஹெட்பேன்ட் ஸ்டிராப் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டிராப் ஹெட்செட் தலையை சுற்றி, சீரான பேலன்ஸ் வழங்குவதை உறுதிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதுபற்றியும் ஆப்பிள் சில தகவல்களை WWDC நிகழ்விலேயே வழங்கி இருந்தது. எனினும், அதிக விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் எடை பற்றி ஆப்பிள் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இதன் எடை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக கூடுதலாக மற்றொரு ஸ்டிராப், ஹெட்செட் எடையை தாங்கி பிடித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
இந்த ஸ்டிராப் பற்றி ஆப்பிள் நிறுவனம் அதிக தகவல்களை வழங்காதது, இதற்கான விளம்பரங்களிலும் தகவல்கள் இடம்பெறாதது போன்ற நடவடிக்கைகளை பார்க்கும் போது, இது கூடுதல் அக்சஸரீயாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், இதுபற்றி ஆப்பள் சார்பில் இதுவரை எந்த தகவல்களும் வழங்கப்படவில்லை.
அமெரிக்க சந்தையில் ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 90 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹெடிஸ்ட் விலை ஏற்கனவே அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான ஸ்டிராப் தனி அக்சஸரீயாக விற்பனை செய்யப்படும் என்று தகவல், இதனை வாங்க திட்டமிட்டவர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.