கணினி

வாட்ச்ஒஎஸ் 10 வெளியீடு - ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் புதிய அம்சங்கள்!

Published On 2023-06-14 05:33 GMT   |   Update On 2023-06-14 05:33 GMT
  • ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் புதிய அம்சங்கள் வழங்குவதற்கான அப்டேட் வெளியிடப்படுகிறது.
  • ஆட்டோ நைட் மோட் வசதி வேஃபைன்டர் வாட்ச் ஃபேசில் மட்டுமே இயங்கும்.

ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான அணியக்கூடிய சாதனம் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா. ஐபோன்களுடன் பயன்படுத்த சீரான அனுபவம் வழங்குவதோடு, பயனர்களின் உடல் ஆரோக்கியம் சார்ந்து ஏராளமான வசதிகளை ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன், அழைப்புகளை மேற்கொள்வது, குறுந்தகவல் அனுப்புவது என ஏராளமான அம்சங்களை மணிக்கட்டில் உள்ள ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா கொண்டு நேரடியாக இயக்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் உடல்நலம் டிராக் செய்யும் வசதிகளான ஹார்ட் ரேட் டிராக்கிங், ஆக்டிவிட்டி டிராக்கிங் மற்றும் இசிஜி போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன.

மெல்லிய டிசைன், அசத்தலான இன்டர்ஃபேஸ் மற்றும் ஏராளமான அம்சங்கள் மூலம் ஆப்பிள் வாட்ச் மாடல் அனைவருக்கும் அத்தியாவசியமான சாதனமாகி விட்டது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்வாட்ச்-க்கு மேலும் அதிக அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் ஆட்டோ நைட் மோட் அம்சம் வழங்கப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவில் உள்ள ஆம்பியன்ட் லைட் சென்சார் மூலம், ஆட்டோ நைட் மோட் தானாக செயல்படுத்தப்படுகிறது. இந்த மோடில் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தும் புளூ லைட் நீக்கப்பட்டு ரெட் மற்றும் பிளாக் நிறங்கள் அடங்கிய இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது. இது இரவு நேரத்தில் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.

நைட் மோட் வசதி வேஃபைன்டர் வாட்ச் ஃபேசில் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் ஆகும். வாட்ச்ஒஎஸ் 10 மூலம் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் ஆட்டோ நைட் மோட் செட்டிங் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுதவிர புதிய விட்ஜெட்களும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றை டிஜிட்டல் கிரவுன் மூலம் இயக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த விட்ஜெட்கள், பயனர் பயன்பாட்டுக்கு ஏற்ப ஸ்மார்ட் ஸ்டாக் வடிவில் ஒருங்கிணைக்கப்படுகிறது.

Tags:    

Similar News