null
ஏராளமான மாற்றங்கள், அசத்தலான புதிய வசதிகளுடன் ஐஒஎஸ் 17 அறிவிப்பு
- புதிய ஐஒஎஸ்-இல் சிரி சேவையை இயக்க ஹே சிரி என்று அழைக்காமல், சிரி என்று மட்டும் கூறினாலே போதும்.
- புதிய ஐஒஎஸ்-இல் ஷேரிங்கும் மிக எளிமையாக மாற்றப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐஒஎஸ் 17 வெர்ஷன் அறிவிக்கப்பட்டது. புதிய ஐஒஎஸ்-இன் பெரும்பாலான செயலிகளில் அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் படி இன்கமிங் அழைப்புகளில் தற்போது ஒவ்வொரு காண்டாக்டிற்கும் குறிப்பிட்ட போஸ்டர்களை செட் செய்து கொள்ள முடியும். வாய்ஸ்மெயில் சேவையில் கூகுள் ஏற்கனவே வழங்குவதை போன்றே வாய்ஸ்மெயில் தகவல்களை எழுத்து வடிவில் காண்பிக்கிறது.
மெசேஜஸ் அம்சத்தில் மிக எளிமையாக பதில் அனுப்புவது, ஆடியோ மெசேஜ்களுக்கு எழுத்து வடிவம் பெறுவது, இன்-லைன் லொகேஷன் விவரங்கள் மற்றும் செக்-இன் வசதி உள்ளது. இத்துடன் ஃபேஸ்டைமில் நேரலை தகவல்களை வழங்க முடியும். இத்துடன் ஸ்டிக்கர் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் எமோஜிக்களை ஸ்டிக்கர் மற்றும் எஃபெக்ட்களாக மாற்ற முடியும்.
சிரி சேவையை இயக்க இனி ஹே சிரி என்று அழைக்காமல், சிரி என்று மட்டும் கூறினாலே போதுமானது. மேலும் ஒவ்வொரு முறையும் கமாண்ட் செய்யாமல், அடுத்தடுத்த கேள்விகளை கேட்க சிரி அதற்கு பதில் அளிக்கும். புதிய ஐஒஎஸ்-இல் ஷேரிங்கும் மிக எளிமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதன் நேம்டிராப் அம்சம் கொண்டு பயனர்கள் காண்டாக்ட் விவரங்களை அவர்களது ஐபோனினை மற்றவர் ஐபோன் அருகில் கொண்டு சென்றாலே பரிமாறிக் கொள்ளலாம். இதே போன்று புகைப்படங்களையும் மிக எளிதில் ஷேர் செய்யலாம்.
புதிய ஐஒஎஸ்-இல் டைப்பிங் செய்வதும் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக ஏ.ஐ. சார்ந்த மாடலிங் ஆட்டோகரெக்ஷன் வசதியை வழங்குகிறது. டைப் செய்யும் போது ஏதேனும் புரியாத வார்த்தை இருப்பின், அதனை ஐஒஎஸ் 17 கண்டறிந்துவிடுகிறது. புதிய ஐஒஎஸ் 17-இல் உள்ள ஜர்னல் ஆப் கொண்டு பயனர்கள் அவர்களது உணர்வுகளை பதிவு செய்ய முடியும்.