அசுஸ் எக்ஸ்பர்ட்புக் சீரஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
- அசுஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய லேப்டாப்கள் பயனர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அசுஸ் இந்தியா நிறுவனம் ஆறு புதிய லேப்டாப் மாடல்களை பிரீமியம் எக்ஸ்பர்ட்புக் சீரிசில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லேப்டாப்கள் B5, B7, B2, B3 மற்றும் 12th Gen B9 மற்றும் B1 என அழைக்கப்படுகின்றன. ஹைப்ரிட் வொர்க் முறையை கருத்தில் கொண்டு வொர்க்ஸ்டேஷன் மற்றும் கன்வெர்டிபில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புது லேப்டாப்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த லேப்டாப்கள் நீடித்த ப்ரோடக்டிவிட்டி மற்றும் பயனர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கின்றன. இவற்றில் பில்ட்-இன் கைரேகை சென்சார், face recognition வசதிக்காக IR கேமரா, வெப்கேமரா, டேட்டா செக்யுரிட்டிக்காக டிரஸ்டட் பிளாட்ஃபார்ம் மாட்யுல் (TPM) 2.0 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.
எக்ஸ்பர்ட்புக் B5 சீரிஸ் மாடல்களில் இண்டெல் 12th Gen CoreTM i7-P சீரிஸ் 28W பிராசஸர், தண்டர்போல்ட் 4, ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், அதிகபட்சம் 40 ஜிபி குயிக் DDR ரேம், வைபை 6 சப்போர்ட் உள்ளிட்டவை எக்ஸ்பர்ட் B5 மற்றும் B5 ஃப்ளிப் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பர்ட்புக் B5 மற்றும் B5 ஃப்ளிப் மாடல்களில் 14 இன்ச் FHD+ ஸ்கரீன், ஆண்டி-கிலேர் கோட்டிங் உள்ளது. B5 ஃப்ளிப் மாடலில் டச் சப்போர்ட் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்டெப்லெஸ் கன்வெர்டிபில் ஹின்ஜ் உள்ளது.
எக்ஸ்பர்ட்புக் B7 ஃப்ளிப் மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் அதிநவீன 12th Gen இண்டெல் கோர் i7 28-வாட் P சீரிஸ் பிராசஸர், வைபை 6, ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 14 இன்ச் QHD+ 2560x1600 பிக்சல் ஆண்டி கிலேர் டச் ஸ்கிரீன், அசுஸ் பென், 360-டிகிரி ஹின்ஜ் உள்ளது.
எக்ஸ்பர்ட்புக் B2 மாடல் கிளாம்ஷெல் டிசைன் அல்லது ஃப்ளிப் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றில் முறையே 15.6 இன்ச் அல்லது 14 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் 12th Gen இண்டெல் கோர் vப்ரோ பிராசஸர்கள் உள்ளன. இத்துடன் பேக்லிட் கீபோர்டு, IR HD வெப்கேமரா, ஸ்மார்ட் கார்டு ரீடர், ஹார்டுவேர் TMP 2.0 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.
எக்ஸ்பர்ட்புக் B3 ஃப்ளிப் 14 இன்ச் ஸ்கிரீன், TUV ரெயின்லாந்து சான்று, 12th Gen இண்டெல் கோர் i7 பிராசஸர், 360 டிகிரி டேப்லெட் மோட், ரி-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கீபோர்டு, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பர்ட்புக் B9 மாடலில் 12th Gen இண்டெல் கோர் i7 பிராசஸர் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், 32 ஜிபி LPDDR5 5200 ரேம், அதிகபட்சம் ட்வின் 2TB எஸ்எஸ்டி, இண்டெல் வைபை 6 வழங்கப்பட்டுள்ளது.