கணினி

சக்திவாய்ந்த மெஷின் - இன்டெல் 13th Gen சிப்செட் உடன் அசுஸ் AIO சீரிஸ் அறிமுகம்!

Published On 2023-06-21 01:59 GMT   |   Update On 2023-06-21 01:59 GMT
  • அசுஸ் நிறுவனத்தின் புதிய AIO சீரிஸ் கம்ப்யூட்டர் 7.2 கிலோ எடை கொண்டிருக்கிறது.
  • புதிய அசுஸ் கம்ப்யூட்டரில் 23.8 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.

அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக தனது சாதனங்களை விரிவுப்படுத்தி வருகிறது. உலகளவில் அசுஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரும் சந்தையாக இந்தியா விளங்குகிறது. அசுஸ் நிறுவனம் சமீபத்தில் தனது ஆல்-இன்-ஒன் கம்ப்யுட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இந்த வரிசையில், தற்போது புதிய AIO சீரிஸ் சக்திவாய்ந்த செயல்திறன், ஸ்டைலிஷ் டிசைன் மற்றும் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இவை கம்ப்யூட்டரை அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் ஏற்றதாக மாற்றுகிறது. சக்திவாய்ந்த ஆல்-இன்-ஒன் கம்ப்யூட்டரை வாங்குவதற்கு இந்த மாடல்கள் கச்சிதமான தேர்வாக இருக்கும்.

 

இந்திய சந்தையில் இதுவரை மிக குறைந்த அளவிலேயே AIO மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது இந்த நிலை மாறி இருக்கிறது. புதிய அசுஸ் AIO A5 சீரிஸ் இன்டெல் 13th Gen பிராசஸர்களை கொண்டிருக்கின்றன. புதிய கம்ப்யூட்டர் தலைசிறந்த சவுன்ட் கொண்டிருப்பதோடு, அசத்தலான செயல்திறன் கொண்டுள்ளது.

புதிய A5 சீரிஸ் மாடல்களில் அதிகபட்சம் 16 ஜிபி வரையிலான DDR4 ரக ரேம் மற்றும் அதிகபட்சம் 512 ஜிபி M.2 NVMe PCIe SSD ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. இத்துடன் பல்வேறு உயர் ரக ஆடியோ உபகரணங்கள், பிரீமியம் சப்-வூஃபர், அதிக தரமுள்ள ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அசத்தலான மல்டிமீடியா அனுபவம் கிடைக்கிறது.

டிஸ்ப்ளேவை பொருத்தவரை 23.8 இன்ச் FHD, 1920x1080, 16:9, IPS லெவல் பேனல், எல்இடி பேக்லிட் ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் வைபை 6E, ப்ளூடூத் 5.3, வின்டோஸ் 11 ஹோம் எடிஷன் ஒஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய அசுஸ் AIO A5 சீரிஸ் துவக்க விலை ரூ. 94 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News