கணினி

தப்பு கண்டுபிடித்து ரூ. 16 லட்சம் வரை வாங்கிக்கோங்க... ஒபன்ஏஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Published On 2023-04-12 09:22 GMT   |   Update On 2023-04-12 09:22 GMT
  • ஒபன்ஏஐ நிறுவனத்தின் பக் பவுண்டி திட்டம் இன்று அமலுக்கு வந்தது.
  • திட்டத்தின் கீழ் கண்டறியப்படும் பிழையின் தீவிரத்தன்மையை பொருத்து 200 டாலர்கள் வழங்கப்படுகிறது.

உலகளவில் பெரும் பேசுபொருளாகி இருக்கும் சாட்ஜிபிடி சேவையை உருவாக்கிய ஒபன்ஏஐ நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சிஸ்டம்களில் பிழையை கண்டறிவோருக்கு 20 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16.4 லட்சம் வரை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது சேவையில் பிழையை கண்டறிவோருக்கு, இதுபோன்ற தொகை வழங்குவதை பக் பவுண்டி (Bug Bounty) திட்டம் என்ற பெயரில் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

அந்த வரிசையில், ஒபன்ஏஐ நிறுவனத்தின் பக் பவுண்டி திட்டம் இன்று அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் கண்டறியப்படும் பிழையின் தீவிரத்தன்மையை பொருத்து குறைந்த பட்சமாக 200 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரத்து 412 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 பக்-கிரவுட் என்ற பக் பவுண்டி பிளாட்ஃபார்மில், ஒபன்ஏஐ நிறுவனம் ஆராய்ச்சியாளர்கள் சாட்ஜிபிடி சேவையில் ஆய்வு செய்ய அழைப்பு விடுத்திருக்கிறது. இதில் சாட்ஜிபிடி செயல்பாடு, ஒபன்ஏஐ சிஸ்டம்கள் எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்து, மூன்றாம் தரப்பு செயலிகளுடன் தகவல்களை பரிமாறி கொள்கிறது என்பதை ஆய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தலாம்.

தனியுரிமை விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டில் இத்தாலி நாட்டில் சாட்ஜிபிடி சேவைக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் ஜெனரேடிவ் ஏஐ சேவைகளை சம்பந்தப்பட்ட ஆணையங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News