கணினி
null

ஆப்பிள் வாட்ச் தோற்றத்தில் ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!

Published On 2022-12-26 05:14 GMT   |   Update On 2022-12-26 05:14 GMT
  • ஃபயர் போல்ட் நிறுவனத்தின் முற்றிலும் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் தோற்றத்தில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது.
  • காண்டாக்ட் மற்றும் டயலர் போன்ற செயலிகள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் பிரீலோடு செய்யப்பட்டே வழங்கப்படுகின்றன.

இந்தியாவை சேர்ந்த AIoT பிராண்டு ஃபயர் போல்ட் இந்திய சந்தையில் தனது புது ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் 1.96 இன்ச் டிஸ்ப்ளே, முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. டிசைனை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது.

இத்துடன் சீராக இயங்கும் கிரவுன், 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார், ஸ்கிராட்ச் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதில் உள்ள 1.96 இன்ச் டிஸ்ப்ளே HD ரெசல்யூஷன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்குகிறது. அல்ட்ரா நேரோ ஃபிரேம் டிசைன், IP667 தரச் சான்றுடன் ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் டஸ்ட் மற்றும் கிராக் ரெசிஸ்டண்ட் வசதியும் கொண்டிருக்கிறது.

ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் கொண்டிருக்கிறது. இதில் காண்டாக்ட்ஸ் மற்றும் டயலர் ஆப்கள் பிரீலோடு செய்யப்பட்டுள்ளன. 123 ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கும் ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் 5 ஜிபிஎஸ் அசிஸ்ட் மோட்களை கொண்டிருக்கிறது. 24x7 இதய துடிப்பு சென்சார் வசதியும் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ளது.

புதிய ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு தேவையான பேட்டரி லைஃப் வழங்குகிறது. மேலும் இதன் ஸ்டாண்ட் பை 20 நாட்கள் ஆகும். ப்ளூடூத் காலிங் பயன்படுத்தும் போது இரண்டு நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குவதோடு, குயிக் சார்ஜிங் வசதியும் கொண்டிருக்கிறது. அதன்படி பத்து நிமிடங்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

இந்திய சந்தையில் ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச்- பிளாக், புளூ, கோல்டு, பிளாக் & கோல்டு என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 ஆகும். விற்பனை டிசம்பர் 30 மதியம் 12 மணிக்கு அமேசான் வலைதளத்தில் துவங்குகிறது.

Tags:    

Similar News