ஹானர் பேட் X8 புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்
- ஹானர் பேட் டேப்லெட்டின் புதிய வேரியண்ட் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- ஹானர் பேட் X8 மாடல் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கிறது.
ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ஹானர் பேட் X8 (4ஜிபி ரேம், 64 ஜிபி) மாடல் அறிமுகம் செய்தது. முன்னதாக இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் அதிக மெமரி கொண்ட வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய ஹானர் பேட் X8 மாடலில் 10.1 இன்ச் FHD ஸ்கிரீன், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80 பிராசஸர், மேஜிக் யுஐ 6.1, 5MP பிரைமரி கேமரா, 2MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த டேப்லெட் 7.55mm அலுமினியம் அலாய் பாடி கொண்டிருக்கிறது. இத்துடன் 5100 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ஹானர் பேட் X8 அம்சங்கள்:
10.1 இன்ச் 1920x1200 பிக்சல் FHD IPS டிஸ்ப்ளே
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80
ARM மாலி G52 2EEMC2 GPU
3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யுஐ 6.1
5MP பிரைமரி கேமரா
2MP செல்ஃபி கேமரா
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5100 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஹானர் பேட் X8 மாடலின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வெர்ஷன் புளூ ஹவர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 11 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஹானர் பேட் X8 மாடலின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 999 ஆகும்.