கணினி

IMAX டிஸ்ப்ளே கொண்ட ஹெச்பி லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-07-13 02:43 GMT   |   Update On 2023-07-13 02:43 GMT
  • இந்திய சந்தையில் IMAX சான்று பெற்ற தரவுகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மட்டுமே வழங்குகிறது.
  • ஹெச்பி என்வி X360 15 மாடலில் ஏஐ இமேஜ் சிக்னல் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹெச்பி நிறுவனம் தனது என்வி சீரிஸ் லேப்டாப் மாடல்களில் புதிய வெர்ஷனை இணைத்துள்ளது. புதிய ஹெச்பி என்வி X360 15 லேப்டாப், இன்டெல் மற்றும் ஏஎம்டி என இருவித பிராசஸர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் ஏஐ சார்ந்து இயங்கும் அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த லேப்டப்-இல் உள்ள டிஸ்ப்ளே, கணினிகளுக்காக முதல் முறை சான்று பெற்றுள்ளன.

புதிய ஹெச்பி என்வி X360 15 மாடலின் டாப் வேரியண்டில் IMX என்ஹான்ஸ்டு சான்று பெற்று இருக்கிறது. சந்தையில் இதுபோன்ற சான்று பெற்ற முதல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள IMAX என்ஹான்ஸ்டு சான்று கொண்ட டிஸ்ப்ளே, ஆஸ்பெக்ட் ரேஷியோவை நீட்டித்து வழங்குகிறது.

 

இத்துடன் IMAX தியட்ரிக்கல் சவுன்ட் மிக்ஸ் வசதி உள்ளது. இது டிடிஎஸ் X தொழில்நுட்பத்தின் விசேஷ டியூனிங்கை பயன்படுத்தி, சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதன் டிஸ்ப்ளே கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது என சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் டச் மற்றும் பென் இன்புட் வசதிகளை கொண்டுள்ளது.

தற்போது இந்திய சந்தையில் IMAX சான்று பெற்ற தரவுகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மட்டுமே வழங்கி வருகிறது. எனினும், ஹெச்பி இந்தியா ஒடிடி தளத்துடன் கூட்டணி தொடர்பாக எந்த தகவலையும் வழங்கவில்லை. ஹெச்பி என்வி X360 15 மாடலில் ஏஐ இமேஜ் சிக்னல் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இது பயனர்கள் சிஸ்டத்தை விட்டு தூரமாக நடந்து சென்றதை கண்டறிந்து, தானாக லாக் செய்து விடும். பிறகு, பயனர்கள் லேப்டாப் அருகில் வருவதை உணர்ந்து, அதனை தானாக அன்லாக் செய்து விடும். ஹெச்பி பிரெசன்ஸ் 2.0 அம்சம் கொண்டு வீடியோ அழைப்புகளை மேம்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

ஹெச்பி என்வி X360 15 அம்சங்கள்:

15.6 இன்ச் FHD+ OLED, 500-நிட்ஸ் HDR, IMAX என்ஹான்ஸ்டு சான்று கொண்ட டிஸ்ப்ளே

5MP IR கேமரா, டூயல் மைக்ரோபோன்

பேங் &ஆல்ஃபுசன் டூயல் ஸ்பீக்கர்கள்

வைபை 6E, ப்ளூடூத் 5.3

4-செல் 55 வாட் ஹவர் லி-அயன் பாலிமர் பேட்டரி

65 வாட் அல்லது 90 வாட் அடாப்டர்

இன்டெல் கோர் i5-1335U i7-1355U பிராசஸர்

ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ் அல்லது NVIDIA GeForce RTX3050 GPU

8 ஜிபி, 16 ஜிபி LPDDR5 ரேம்

2 தன்டர்போல்ட் 4 போர்ட்கள்

ஏஎம்டி வேரியண்ட்

ஏம்டி ரைசன் 5 7530U அல்லது ஏஎம்டி ரைசன் 7 7730U பிராசஸர்

ஏஎம்டி ரேடியான் கிராஃபிக்ஸ்

8 ஜிபி, 16 ஜிபி LPDDR4X ரேம்

10Gbps யுஎஸ்பி சி போர்ட்

விலை விவரங்கள்:

ஹெச்பி என்வி X360 15 2-இன்-1 லேப்டாப் விலை ரூ. 78 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் விற்பனை ஹெச்பி ஆன்லைன் மற்றும் ஹெச்பி வொர்ல்டு ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது. இந்த லேப்டாப் நைட்ஃபால் பிளாக் மற்றும் நேச்சுரல் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஹெச்பி என்வி லேப்டாப் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் கடலில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News