கணினி

இன்ஸ்டாவில் அறிமுகமான Account Status அப்டேட் - எதற்கு தெரியுமா?

Published On 2022-12-08 11:17 GMT   |   Update On 2022-12-08 11:17 GMT
  • இன்ஸ்டாகிராம் செயலியில் சமீப காலங்களில் அதிகளவு புது அம்சங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
  • அந்த வரிசையில், இன்ஸ்டாவில் புது அம்சத்திற்கான அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது.

உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இன்ஸ்டாகிராம் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அப்டேட் உங்களின் பதிவுகளை ஏன் யாரும் பார்க்கவில்லை என்பதை தெரிவிக்கும் வசதி கொண்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி புது அப்டேட் பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

புது அப்டேட் மூலம் இன்ஸ்டாவின் "Account Status" ஆப்ஷனில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது நீங்கள் பதிவிட்ட போஸ்ட் ஏதேனும் னஉங்களின் அக்கவுண்ட்-ஐ மக்கள் பார்க்க விடாமல் செய்கிறதா என்பதை தெரிவிக்கும். சமீபத்தில் மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இளைஞர்களை பாதுகாக்கும் வகையில் புதிய பிரைவசி அப்டேட்களை வெளியிட்டது.

அந்த வகையில், தற்போது Professional Account-களில் இருந்து பதிவுகள் மற்றவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதை நிறுத்தி இருக்கிறதா என்பதை இன்ஸ்டாவின் Settings -- Account -- Account Status ஆப்ஷனில் காண்பிக்கிறது. டிக்டாக்கிற்கு பெரும் போட்டியாளராக விளங்கும் நிலையில், இன்ஸ்டாவில் பரிந்துரைகள் Explore பக்கம், Home Feed உள்ளிட்டவைகளில் காண்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அக்கவுண்ட்களின் தரவுகள் பரிந்துரைக்கப்படுவதை மெட்டா நிறுவனம் அடுத்த ஆண்டு இறுதிவரை இருமடங்கு அதிகரிக்க முடிவு செய்து இருக்கிறது. இன்ஸ்டாகிராமின் மிக கடினமான நிபந்தணைகளுக்கு முழுமையாக பூர்த்தியாகும் பதிவுகள் Explore பக்கத்தில் தோன்ற சரியானதாக இருக்கும் பட்சத்தில் அவை பரிந்துரைக்கப்படுகின்றன.

Tags:    

Similar News