கணினி

ஐபோன்களில் யுஎஸ்பி டைப் சி போர்ட்? ஆப்பிள் நிர்வாகி விளக்கம்

Published On 2022-10-26 07:26 GMT   |   Update On 2022-10-26 07:26 GMT
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களில் யுஎஸ்பி டைப் சி ரக போர்ட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • முன்னதாக ஐரோப்பிய யூனியன் சார்பில் மின்சாதனங்களில் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட் வழங்க வலியுறுத்தப்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஏற்ப ஐபோனில் யுஎஸ்பி டைப் சி ரக சார்ஜர் வழங்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த அதிகாரி கிரெக் கோஸ்வியக் தெரிவித்து இருக்கிறார். மற்ற விதிகளை பின்பற்றுவதை போன்றே இந்த விதியையும் ஆப்பிள் நிறுவனம் பின்பற்றும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், எந்த ஐபோன் மாடலில் இருந்து லைட்னிங் போர்ட் நீக்கப்பட்டு யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை. கலிபோர்னியாவில் நடைபெற்ற வால் ஸ்டிரீட் ஜர்னல் கருத்தரங்கில் இந்த தகவலை கிரெக் கோஸ்வியக் தெரிவித்து இருந்தார்.

பல ஆண்டுகளாகவே ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இடையே முரணான கருத்துக்கள் நிலவி வருகின்றன. முன்னதாக ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனம் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்க வலியுறுத்தி வந்தனர். இது சாத்தியமாகி இருப்பின் லைட்னிங் போர்ட் மற்றும் தற்போதைய யுஎஸ்பி டைப் சி போர்ட் எதுவும் கண்டறியப்பட்டு இருக்காது என கோஸ்வியக் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு முதல் ஐபோனில் யுஎஸ்பி டைப் சி வழங்க ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐரோப்பிய யூனியன் விதிகள் 2024 வாக்கில் அமலுக்கு வருகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது மேக், பல்வேறு ஐபேட் மற்றும் அக்சஸரீக்களில் யுஎஸ்பி டைப் சி வழங்கி விட்டது.

Tags:    

Similar News