கணினி

இப்படியும் செய்யலாமா? எல்ஜி உயரமான புதிய மானிட்டர் அறிமுகம்!

Published On 2023-06-19 02:11 GMT   |   Update On 2023-06-19 02:11 GMT
  • எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய மானிட்டர் வித்தியாசமான செட்டப் கொண்டிருக்கிறது.
  • புதிய டூயல்அப் மானிட்டருடன் எல்ஜி எர்கோனோமிக் ஸ்டான்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

எல்ஜி நிறுவனம் முற்றிலும் புதிய அல்ட்ரா-டால் டூயல்அப் மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. தற்போது சந்தையில் கிடைக்கும் மாணிட்டர்களை போன்றே அகலமாக இல்லாமல், உயரமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய எல்ஜி மானிட்டர் 28MQ750 என்று அழைக்கப்படுகிறது. இதன் அம்சங்கள் அதன் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

எல்ஜி டூயல்அப் 28MQ780 மானிட்டர் வழக்கமன 27 இன்ச் டிஸ்ப்ளே இல்லை. மாறாக இதில் உயரமான ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளது. இதன் ஸ்கிரீன் அளவு 27.6 இன்ச் அளவில் உள்ளது. இதில் எல்ஜி நானோ IPS பேனல், மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மானிட்டர் 2560x2880 பிக்சல், அகலமான வைடு கலர் கமுட், 300 நிட்ஸ் பிரைட்னஸ், HDR10 சப்போர்ட் கொண்டுள்ளது.

 

இந்த மானிட்டரின் பிரத்யேக வடிவமைப்பு மூலம், இரண்டு 21.5 இன்ச் QHD ரெசல்யூஷன் கொண்ட மானிட்டர்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக வைக்கப்பட்டதை போன்று காட்சியளிக்கிறது. மேலும் டூயல்அப் மானிட்டருடன் எல்ஜி எர்கோனோமிக் ஸ்டான்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மானிட்டரை எளிமையாக தூக்குவதும், வசதிக்கு ஏற்ப சுழற்றிக் கொள்ளவும் முடியும்.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை புதிய மானிட்டர் யுஎஸ்பி டைப் சி இன்டர்ஃபேஸ், 90 வாட் எக்ஸ்டெர்னல் பவர் சப்ளை வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு HDMI மற்றும் ஒரு DP இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் இன்-பில்ட் டூயல் 7 வாட் ஹை பவர் ஸ்பீக்கர்கள் உள்ளன.

புதிய டூயல் அப் மானிட்டர் தற்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர சர்வதேச சந்தையிலும் கிடைக்கும் எல்ஜி டிஸ்ப்ளே விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 49 ஆயிரத்து 096 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News