உலகளவில் முதல் முறை - இப்படி ஒரு வசதியா? எல்ஜியின் வேற லெவல் டிவி அறிமுகம்..!
- எல்ஜி சிக்னேச்சர் OLED M மாடல் மெல்லிய மற்றும் அதிநவீன கேலரி டிசைன் கொண்டிருக்கிறது.
- இதில் உள்ள ஜீரோ கனெக்டிவிட்டி பாக்ஸ் ஏராளமான கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை வழங்குகிறது.
எல்ஜி எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் எல்ஜி சிக்னேச்சர் OLED M உலகின் முதல் வயர்லெஸ் OLED டிவி மாடல் விற்பனையை துவங்கி இருக்கிறது. முன்னதாக இந்த டிவி 2023 சர்வதேச நுகர்வோர் மின்சாதன நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய எல்ஜி வயர்லெஸ் டிவி 97 இன்ச் OLED ஸ்கிரீன் மற்றும் ஜீரோ கனெக்ட் பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த டிவி ரியல்-டைமில் 4K 120Hz வீடியோ மற்றும் ஆடியோவை டிரான்ஸ்மிட் செய்யும் திறன் கொண்டுள்ளது. எல்ஜி சிக்னேச்சர் OLED M டிவி கேபிள்களால் ஏற்படும் சிக்கல்களை களையும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த டிவியில் வயர்லெஸ் ஏவி டிரான்ஸ்மிஷன் இருப்பதால் கேமிங் கன்சோல், செட்-டாப் பாக்ஸ் மற்றும் இதர சாதனங்களுடன் எளிதில் இணையும் வசதி கொண்டிருக்கிறது. இந்த டிவியில் இருக்கும் ஒற்றை கேபிள் பவர் கார்டு மட்டும் தான் எனலாம். இதில் உள்ள ஜீரோ கனெக்ட் தொழில்நுட்பம் கொண்டு பயனர்கள் கேபிள் மற்றும் இதர சாதனங்களால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க முடியும்.
எல்ஜி சிக்னேச்சர் OLED M மாடல் மெல்லிய மற்றும் அதிநவீன கேலரி டிசைன் கொண்டிருக்கிறது. இந்த டிவி பயன்படுத்துவோர் டிவி அருகில் மேஜை எதுவும் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த டிவியில் 97 இன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஜீரோ கனெக்டிவிட்டி பாக்ஸ் HDMI 2.1, USB, RF, LAN மற்றும் ப்ளூடூத் என ஏராளமான கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை வழங்குகிறது.
புதிய எல்ஜி சிக்னேச்சர் M 97 இன்ச் மாடல் விலை 35 ஆயிரத்து 186 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 29 லட்சத்து 9 ஆயிரத்து 312 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை முதற்கட்டமாக தென் கொரியாவில் துவங்கி இருக்கிறது. விரைவில் சர்வதேச சந்தையில் இதன் விற்பனை துவங்க இருக்கிறது.