கணினி

4K ரெசல்யூஷன் கொண்ட புதிய அல்ட்ராகியர் மாணிட்டர்களை அறிமுகம் செய்த எல்ஜி

Published On 2023-06-07 06:00 GMT   |   Update On 2023-06-07 06:00 GMT
  • இரு மாடல்களிலும் 4K ரெசல்யூஷன், 3840x2160 பிக்சல்கள், 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.
  • கனெக்டிவிட்டிக்கு டிஸ்ப்ளே போர்ட் 1.4, இரண்டு HDMI 2.1 போர்ட்கள், யுஎஸ்பி 3.0 ஹப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

எல்ஜி நிறுவனம் தனது முற்றிலும் புதிய 4K மாணிட்டர்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாணிட்டர்கள் அல்ட்ராகியர் 27GR93U மற்றும் அல்ட்ராகியர் 32GR93U என்று அழைக்கப்படுகின்றன. பெயருக்கு ஏற்றார்போல் இரு மாணிட்டர்களிடையேயான வித்தியாசம் அவற்றின் ஸ்கிரீன் அளவுகள் தான் எனலாம்.

எல்ஜி 27GR93U மாடலில் 27 இன்ச் பேனலும், அல்ட்ராகியர் 32GR93U மாடலில் 31.5 இன்ச் அகலம் கொண்ட பெரிய டிஸ்ப்ளேவும் வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் 4K ரெசல்யூஷன், 3840x2160 பிக்சல்கள், 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இந்த மாணிட்டரில் IPS பேனல், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. இத்துடன் 1 ms GtG வரையிலான ரெஸ்பான்ஸ் டைம் உள்ளது. இதன் மூலம் சிறப்பான கேமிங் அனுபவம் கிடைக்கும்.

இரண்டு மாணிட்டர்களிலும் AMD FreeSync பிரீமியம் மற்றும் NVIDIA G-Sync சப்போர்ட் உள்ளது. இவை சீரான கேம்பிளே அனுபவம் வழங்க செய்கிறது. இத்துடன் கனெக்டிவிட்டிக்கு டிஸ்ப்ளே போர்ட் 1.4, இரண்டு HDMI 2.1 போர்ட்கள், யுஎஸ்பி 3.0 ஹப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்ட ஸ்டாண்டுகள் வழங்கப்படுகின்றன.

புதிய எல்ஜி அல்ட்ராகியர் மாணிட்டர்கள் எல்ஜி பிரிட்டன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதுபற்றிய இதர விவரங்கள் இடம்பெறவில்லை. 

Tags:    

Similar News