கணினி

அசத்தல் தோற்றம் கொண்ட நோக்கியா பியுர் யுஐ அறிமுகம்!

Published On 2023-04-01 15:04 GMT   |   Update On 2023-04-01 15:04 GMT
  • நோக்கியா உருவாக்கி இருக்கும் யுஐ முற்றிலும் புதிய டைப்ஃபேஸ் மூலம் தோற்றத்தை புதிதாக கொண்டிருக்கிறது.
  • புதிய நோக்கியா பியுர் யுஐ-இல் புதிய டிசைன் கொண்ட ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளன.

நோக்கியா சமீபத்தில் தான், தனது லோகோவை மாற்றி முற்றிலும் புதிதாக அதிநவீன தோற்றத்தை வழங்கியது. பல ஆண்டுகளுக்கு பின் நோக்கியா லோகோவில் மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நோக்கியா C32, நோக்கியா C22, நோக்கியா C12 மற்றும் நோக்கியா C12 ப்ரோ என பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை நோக்கியா பிராண்டு அறிமுகம் செய்தது.

இந்த வரிசையில், நோக்கியா பியுர் யுஐ அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த யுஐ வர்த்தக ரீதியிலான பொருட்களில் பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக இந்த யுஐ ஹெச்எம்டி உற்பத்தி செய்யும் நோக்கியா ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படாது. புதிய யுஐ தனித்துவ தோற்றம் மற்றும் மிக எளிய டிசைன் கொண்டிருக்கிறது.

முற்றிலும் புதிய டிசைன் பாரம்பரியம் கொண்டிருக்கும் நோக்கியா பியுர் யுஐ, நோக்கியா எதிர்காலத்தில் உருவாக்கும் புதிய சாதனங்களில் மட்டும் வழங்கப்பட இருக்கிறது. இதன் ஸ்டைல் சிறப்பாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும், எதிர்காலத்திற்கு ஏற்ற வகையிலும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக நோக்கியா தெரிவித்துள்ளது.

புதிய தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கியா பியுர் யுஐ பின்னணியில் நோக்கியா பியுர் இண்டர்ஃபேஸ் பயன்படுத்தப்பட இருக்கிறது. பியுர் யுஐ-இல் புதிய ஐகான்கள், கஸ்டமைசேஷன் வசதியுடன் கிடைக்கின்றன. இவை குறிப்பிட்ட சாதனத்திற்கு ஏற்ற பயன்களை வழங்கும் என தெரிகிறது. இதில் உள்ள அனிமேஷன்கள் மென்மையாக காட்சியளிக்கின்றன. 

Tags:    

Similar News