பிளாஷ் விற்பனைக்கு வரும் நத்திங் இயர் (ஸ்டிக்) - விலை மற்றும் முழு விவரங்கள்
- நத்திங் நிறுவனம் சமீபத்தில் தான் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்து இருந்தது.
- புதிய இயர்போன் நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஆடியோ சாதனமாக அறிமுகமானது.
நத்திங் நிறுவனம் முற்றிலும் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை இந்திய சந்தையில் சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலில் செமி இன்-இயர் டிசைன் மற்றும் ரோலிங் மெக்கானிசம் கொண்ட உருளை வடிவத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நத்திங் நிறுவனத்தின் முற்றிலும் வித்தியாசமான டிசைன் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலிலும் பிரதிபலித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் நத்திங் இயர் (ஸ்டிக்) விற்பனை நவம்பர் 17 ஆம் தேதி தான் துவங்க இருக்கிறது. எனினும், இன்று (நவம்பர் 13) மதியம் லிமிடெட் விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனை மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. இதில் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) வாங்குவோர் ஏற்கனவே நத்திங் போன் (1) அல்லது நத்திங் இயர் (1) பயன்படுத்தும் பட்சத்தில் ரூ. 1000 தள்ளுபடி பெறலாம்.
நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலின் விலை இந்தியாவில் ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே நத்திங் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை ரூ. 7 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும்.
இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை ஏற்கனவே நத்திங் போன் (1) அல்லது நத்திங் இயர் (1) மாடலை வாங்க பயன்படுத்திய ப்ளிப்கார்ட் அக்கவுண்டில் வாங்க வேண்டும். இன்றைய பிளாஷ் விற்பனையில் வாங்க முடியாதவர்கள் நவம்பர் 17 ஆம் தேதி துவங்கும் ஓபன் சேலில் வாங்கிட முடியும். அப்போது நத்திங் இயர் (ஸ்டிக்) வாங்கும் நத்திங் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.
அம்சங்களை பொருத்தவரை நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் ஹால்ஃப்-இன்-இயர் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் இயர் ஒவ்வொன்றிலும் 12.6mm டைனமிக் டிரைவர்கள் உள்ளன. மேலும் இந்த இயர்போன் AAC மற்றும் SBC கோடிங் சப்போர்ட், பேஸ் லாக் ஆப்ஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.
இதனை முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்போன் 7 மணி நேர பேக்கப் வழங்கும். சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் 29 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இத்துடன் ப்ளூடூத் 5.2, IP54 சான்று, இன்-இயர் ரெகக்னிஷன், கூகுள் பாஸ்ட் பேர், மைக்ரோசாப்ட் ஸ்விப்ட் பேர், நத்திங் X செயலி, கஸ்டமைஸ் EQ மற்றும் மோஷன்ஸ், லோ லேக் மோட் போன்ற அம்சங்கள் உள்ளன.