ரூ. 17,999 விலையில் ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ அறிமுகம் - ப்ரோ மாடல்-னாலும் நியாயம் வேண்டாமா?
- ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ கஸ்டமைஸ் செய்யக்கூடிய டைப்பிங் அனுபவத்தை வழங்குகிறது.
- ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ வயர்டு மற்றும் வயர்லெஸ் முறையில் கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்குகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் மெக்கானிக்கல் கீபோர்டு, ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ விலை மற்றும் விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஏப்ரல் 2023 வாக்கில் வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ மாடல் தற்போது தான் விற்பனைக்கு வருகிறது.
அலுமினியம்-கிராஃப்ட் செய்யப்பட்டு மிகக் குறைந்த எடை கொண்டிருக்கும் ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ கஸ்டமைஸ் செய்யக்கூடிய டைப்பிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் ஹாட்-ஸ்வாப் செய்யக்கூடிய ஸ்விட்ச்கள், ஒபன்-சோர்ஸ் ஃபர்ம்வேர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை டைப்பிங்கின் போது தனித்துவம் மிக்க அனுபவத்தை வழங்குகின்றன.
கீக்ரோன் உடனான கூட்டணியில் உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ வயர்டு மற்றும் வயர்லெஸ் முறையில் கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்குகிறது. இதற்காக இந்த கீபோர்டில் ப்ளூடூத் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டு இந்த கீபோர்டினை ஐந்து மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும்.
புதிய ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ மாடல் டார்க் கிரே மற்றும் லைட் கிரே என்று இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விறப்னை ஒன்பிளஸ் வலைதளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி துவங்க இருக்கிறது.